வியாழன், 31 ஜூலை, 2014

லோகு புகை பரிசோதனை நிலையம்

அன்புடையீர்,
 வணக்கம். லோகு டிரைவிங் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
          அனைத்து வாகனங்களுக்கும்சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு கருதி புகை பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும்.
  "புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு ஆண்டு பிறகு ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் புகை பரிசோதனை செய்து சான்று பெற வேண்டும். அதற்கான சான்று வாகனத்தில் ஒட்டப்பட வேண்டும். புகை பரிசோதனை செய்யாமல் உள்ள வாகனங்கள் சோதனையின் போது கண்டறியப்பட்டால், இரு சக்கர வாகனங்களுக்கு 250 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 500 ரூபாயயும்,கனரக வாகனங்களுக்கு ரூ.1000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்,'
 சரியான பராமரிப்பு இல்லாத, ஆயுள் காலத்துக்கு பின்னரும் தொடர்ந்து பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து அளவுக்கதிமாக புகை வெளியாகிறது.
 சாலைகளில் செல்லும்போது இத்தகைய வாகனங்களில் இருந்து வரும் புகையை சுவாசிப்பவர்கள் நேரடியாக நுரையீரல் பாதிப்புக்கு ஆளாக நேரிடுகிறது.
 டீசல் பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து வெளியாகும் கறும் புகையை விட பெட்ரோல் பயன்படுத்தும் வாகனங்கள் வெளிப்படுத்தும் வெண் புகை மிகவும் ஆபத்தானது எனக் கூறப்படுகிறது.டீசல் பயன்படுத்தும் வாகனங்களில் கார்பன் அளவு 65 எச்எஸ்யு (ஹேப் ஸ்ட்ரிச் யூனிட்) அளவுக்கு குறைவாகவும், பெட்ரோல் வாகனங்களில் கார்பன் மோனாக்ûஸடின் துகள்கள் 4500 பார்ட்டிக்கல் பெர் மீட்டருக்கு குறைவாகவும் இருக்கவேண்டும். இதற்கு மேல் இருக்கும் வாகனங்கள் இயக்கப்படுவதற்கு தகுதியற்றவை. ஒரு சில வாகனங்களுக்கு அதன் மாடலுக்கு ஏற்ப இந்த அளவீடு மாறுபடும்.  ஒருமுறை புகை பரிசோதனை செய்தால் அவை 6 மாதங்கள் மட்டுமே செல்லுபடியாகும். அதிகமான புகையை வெளிப்படுத்தும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 250, இலகுரக வாகனங்களுக்கு ரூ. 500, கனரக வாகனங்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது 

 எனவே, வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வாகனங்கள் தொடர்பாக எந்த பணிக்காக வந்தாலும் புகை பரிசோதனை சான்று இணைக்கப்பட வேண்டும்.
 புகை பரிசோதனையை அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயப்படுத்தி அதிக புகையை வெளிப்படுத்தும் வாகனங்களை பயன்படுத்துபவர்கள் மீது போக்குவரத்து போலீசாரும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
புகை பரிசோதனை பற்றிய விளக்கம் பின்னர் பதிவிடப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக